மெட்ரோ train பாதை மட்டும் ஏன் கற்கள் இல்லாமல் இருக்கிறது?
வணக்கம் நண்பர்களே! இந்தக் கட்டுரையில் ஒரு அறிவுத் தேடலுக்கான பதிலைப் படிக்க இருக்கிறீர்கள். எனக்குள் எழுந்த அந்த அறிவுத் தேடலுக்கான கேள்வி ஒரு புதிய இணையதளம் உருவாக்க காரணமாக அமைந்தது என்றும் கூறலாம். சரி அந்த கேள்விக்கான பதிலைக் காணலாம்.
பொதுவாக தொடருந்து என்பது அதிகப்படியான மக்களை ஏற்றிக் கொண்டு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் பொது போக்குவரத்தாக அமைகிறது. அதன்படி பார்க்கும் போது பலவகையான தொடருந்துகள் பல நாட்டிலும் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. தொடருந்துகளின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் புதிய ஒரு பரிணாமத்தில் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறது. அது இப்போதோ ஹைப்பர் லூப் லெவல் வரைக்கும் வந்துள்ளது. மெட்ரோ train என்பது தொடருந்துகளின் ஒரு வகையே.
ஆக்சிஜனை அதிகமாக உற்பத்தி செய்யவது கடல் என்றால் உங்களால் நம்ப முடியுமா? கீழே உள்ள காணொளியைக் காணுங்கள்
பொதுவாக தொடருந்து பாதை இரும்பினால் செய்யப்பட்டதாகும். இது புவிப் பரப்பின் மீதோ அல்லது கொஞ்சம் பூமியில் பதிக்கப் பட்டதகவோ இருக்கும். இருப்பு பாதையும் பேருந்து சாலையும் இணையும் இடங்களில் பூமியில் பதிக்கபட்டதைக் காணலாம். மற்ற இடங்களில் பூமியின் மேலே சில கற்களை அதன் ஓரங்களில் பரப்பி வைத்திருப்பதாகக் காணலாம். எதற்காக பரப்பி வைக்க வேண்டும் என்றால் இரயில் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகளைத் தாங்க வேண்டும் என்று தான். அதுமட்டும் அன்றி அந்த இருப்புப் பாதையை வரையறுத்த பாதையில் நிலைநிறுத்தவும் தான். இப்படி இருக்கும் போது ஏன் மெட்ரோ train பாதை மட்டும் கற்கள் இல்லாமல் இருக்கிறது என்று கவனித்தீர்களா? என்னுடைய அந்த கவனம் தான் இந்தக் கட்டுரை.
நமது யூடியூப் சேனல் ஐ subscribe செய்யுங்கள். - https://www.youtube.com/c/mechtalkies
மெட்ரோ train என்பது பெரு நகரங்களில் செயல் பட்டுக் கொண்டு இருக்கும் ஒரு பொது போக்குவரத்து ஆகும். இது பொதுவாகவே மின்சாரம் கொண்டு இயக்கப் படுகிறது. இதன் பாதை பூமியில் பதியப் பட்ட இருப்புப் பாதைகள் போன்றது. மெட்ரோ train பாதை குகைக்குள் செல்வது, பாலத்தில் செல்வது போன்று எல்லாம் இருக்கும். இது கான்கிரீட் பாதையில் இருப்புப் பாதையை பதியப் பெற்றதாகும். இதன் ஆயுள் காலம் அதிகமாக இருக்கிறது. மெட்ரோ trainன் வெயிட் ஆனது engine மூலம் இயங்கும் trainஐ விட குறைவு. Engine மூலம் இயங்கும் train அதிக weight கொண்டது. ஆகவே அது இயங்கும் பொது அதிக அதிர்வு வெளிப்படும். அதை கற்களை அதன் பாதையில் பரப்பி அதன் பாதிப்பை தடுக்கின்றனர். மேலும் இவ்வகை பாதைகளைப் பராமரிக்க அதிக பணம் செலவு செய்ய தேவைப்படும். மெட்ரோ train முழுவதும் மின்சாரம் மூலமாக இயங்குவதால் அதிர்வு குறைவு மற்றும் கான்கிரீட் பாதையின் ஆயுள் அதிகம். ஆகவே மெட்ரோ train பாதைகளில் நாம் கற்களைப் பரப்புவதில்லை. இந்த வகை ரயில் பாதைகளை ballast less tracks என்று அழப்பதுண்டு
இதுபோன்ற பல அறிவியல் தகவல்களுக்கு கீழே கொடுக்கப் பட்டுள்ள link ஐ கிளிக் செய்யவும்.
ReplyForward |
0 Comments
Write something...